தமிழகத்தில் போஸ்ட் பி.எஸ்சி., டி.ஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆக.9) தொடங்க உள்ளது.
செவிலியப் பட்டயப் படிப்பு
முடித்தவர்களுக்கான போஸ்ட் பி.எஸ்சி, டி.ஃபார்ம், ஏற்கெனவே டி.ஃபார்ம்
படித்து முடித்தவர்களுக்கான பி.ஃபார்ம் (lateral entry) ஆகிய
படிப்புகளுக்கு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில்
கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதில் போஸ்ட் பி.எஸ்சி. படிப்புக்கு ஆகஸ்ட்
9, 10 ஆகிய தேதிகளில் காலை 8.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
டி.ஃபார்ம் படிப்புக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12
மணி வரை கலந்தாய்வு நடைபெறும். பி.ஃபார்ம் படிப்புக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி
பிற்பகல் 3 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...