கடலுாரில் நேற்று துவங்கிய, மாநில அளவிலான
ஜூனியர் தடகள போட்டியில், மூன்று வீரர்கள் புதிய சாதனை நிகழ்த்தினர்.
தமிழ்நாடு தடகள கழகம் சார்பில், 31வது மாநில அளவிலான தடகள போட்டி, கடலுார்
அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.
மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று, 10 ஆயிரம் மீட்டர் நடை போட்டியில், 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர் செர்வின் 50 நிமிடம் 55.4 விநாடிகளில், துாரத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதேபோட்டியில் கோவை சந்தீப், காவியரசன்
முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதல் 14
வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகமது ஆசிப்,
1.80 மீட்டர் துாரம் தாண்டி, புதிய சாதனை படைத்தார். இப்போட்டியில் ஈரோடு
பிரபு, கடலுார் முருகன் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப்
பிடித்தனர்.
வட்டு எறிதலில், 20 வயதிற்குட்பட்ட ஆண்கள்
பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரவருண் 56.05 மீட்டர் துாரத்திற்கு
எறிந்து, புதிய சாதனை புரிந்துள்ளார். இப்போட்டியில் காஞ்சிபுரம் சூர்யா,
திருச்சி தீபன்குமார் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...