அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது
நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல்
அளித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும்
உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது நுழைவுத் தேர்வு
நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அவசர சட்டம் :இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவ சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம்லோக்சபாவில்நிறைவேறியது. இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி, அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழகம் எதிர்ப்பு : இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.விவாதத்தின்போது, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,'' என்றார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும், இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள், மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
ஜே.பி.நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பா.ஜ.,

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...