மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்குவதற்காக
ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் ஆலோசனை மையங்களில் உளவியல் ஆலோசகர்களாகப்
பணியாற்ற இன்று திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்குவதற்காக
ஏற்படுத்தப்பட்டுள்ள 9 நடமாடும் மையங்களுக்கு 9 உளவியல் ஆலோசகர்கள்
தாற்காலிகப் பணி முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வியாண்டின் 10 மாதங்களுக்கு,மாதம்தோறும் ரூ.25,000 வழங்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது, அனுபவம் போன்ற விவரங்களுடன்
மாதிரி விண்ணப்பப் படிவம் www.tnschools.gov.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் பதிவிறக்கம் செய்து
முழுமையாகப் பூர்த்தி செய்து கையொப்பம் இட்டு உரிய சான்றிதழ்களுடன்
"டி.துரைசாமி, துணை இயக்குநர் (மின் ஆளுமை), பள்ளிக் கல்வி இயக்ககம்,
கல்லூரிச் சாலை, டிபிஐ வளாகம், சென்னை-6' என்ற முகவரிக்கு ஒப்புகை
அட்டையுடன் பதிவஞ்சலில் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
என பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...