தொடக்கக்கல்வி துறை சார்பில் நடந்த, பணிநிரவல் கலந்தாய்வில்
பங்கேற்ற ஆசிரியர்கள், உரிய பணியிடத்தில் சேராமல், மாவட்ட மாறுதலுக்கு
விண்ணப்பித்திருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, பணிநிரவல் கலந்தாய்வு, நேற்று முன் தினம்
நடந்தது. இதில், ஒன்றியத்துக்குள், வேறு ஒன்றியத்துக்கு நிரவல் பெற்ற,
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், பணியில் சேராமல் இருந்தால், பொது மாறுதலில்
பங்கேற்கலாம். இதற்கு, பொது மாறுதல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள,
ஏற்கனவே முறையாக, விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்தகவலை, பணிநிரவல் பெற்ற ஆசிரியர்களுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர் தெரியப்படுத்துவது அவசியம்.இவ்வாறு, அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...