மதுரை:தமிழகத்துடன் எய்ம்ஸ் மருத்துவ மனை திட்டம் அறிவிக்கப்பட்ட, மற்ற
மாநிலங் களில் அதற்கான பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இங்கு இடம் தேர்வு
செய்வதில் தொடர் தாமதம் ஏற்படுகிறது.
அழுத்தம் தராத எம்.பி.க்கள் :
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் உள்ளிட்ட
மாவட்டங்களில் தமிழகம் காட்டிய ஐந்து இடங்களை, ஏப்.,2015ல் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தாரித்ரி பாண்டா தலைமையி லான குழு ஆய்வு செய்தது. மே 2015ல் மத்திய அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை மருத்துவமனை அமைக்கப் பட இருக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.
திட்டத்தை விரைந்துசெயல்படுத்தக்கோரி முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மற்றபடி, தி.மு.க., - அ.தி.மு.க., எம்.பி.,க்களின் சார்பில் மத்திய அரசுக்கு எந்தவித அழுத்தமும் தரப்பட வில்லை. இதுவே கேரளா போன்ற மாநிலங்களின் எம்.பி.,க்களாக இருந்தால் கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து சென்று பிரதமரிடம் முறையிட்டிருப்பர்.
அதிக வேகம் தேவை
இடத்தேர்வில் ஏற்பட்டு வரும் தொடர் தாமதத்தால், பல்வேறு ரயில்வே திட்டங்களின் வரிசையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமும் முடங்கி விடக் கூடும் என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. 68.6 லட்சம் மக்கள் தொகையுடன், ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை பெறவுள்ள இமாச்சல் பிரதேசமும், 1.2 கோடி மக்கள் தொகை யுடன் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளை பெற உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலமும்,இத்திட்டத்தை பெற காட்டும் வேகத்தை விட நமக்கு அதிக வேகம் தேவை. தமிழக எம்.பி.,க்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மதுரைக்குஏன் வேண்டும்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு
முடிந்தவுடன், முதற்கட்டமாக 1,500கோடி முதல் 1,800 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப் படும். மருத்துவமனை செயல்பட துவங்கிய தும், தமிழக மக்களும் உலகத் தரமான சிகிச்சை பெறலாம். தமிழக மாணவர்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ படிப்பு களுக்கான 'சீட்'களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எய்ம்ஸ் மதுரையில் அமைந்தால், உயர்தர சிகிச்சைக்காக தென் மாவட்ட மக்கள், 700 கி.மீ., துாரம் பயணித்து சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. காஞ்சிபுரம், சென்னையின் சுற்றுப்புற மாவட்டம் என்பதால், அங்குள்ள வர்கள் ஏற்கனவே தரமான சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை ஆகிய ஊர்களில் இருந்து அதிகபட்சம் மூன்றரை மணி நேரத்திற்குள் மதுரையை அடைந்து விட முடியும். எனவே, எய்ம்ஸ், மதுரை தோப்பூரில் அமைவதே சரியாக இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...