ஆசிரியர்களிடையே ஏற்பட்ட, 'ஈகோ' பிரச்னையால் ஆத்திரம்அடைந்த கிராம மக்கள், வகுப்பறைகளை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை
தாலுகா, பாலி புதுகாலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 169 மாணவ,
மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆறு
ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் ராமதாஸ் இல்லாத நேரத்தில்
பொறுப்பு ஆசிரியையான ராதா, பள்ளி நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதற்கு
ஆசிரியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இப்பள்ளி
ஆசிரியர்களிடையே, 'ஈகோ' பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், ஆசிரியை
ராதா, நேற்று காலை, 9:30 மணிக்கு தாமதமாக பள்ளிக்கு வந்தார். இதை, கணித
ஆசிரியர் செல்வின் தட்டிக் கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த மாணவ மாணவியர் திகைத்து நின்றனர். ஈகோ
பிரச்னை காரணமாக, ஆசிரியர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் ஏற்படுவதால்
ஆவேசமடைந்த கிராம மக்கள், பள்ளிக்கு திரண்டு சென்றனர். ஆசிரியர்கள்,
மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, பள்ளியின் வகுப்பறைகளை இழுத்து
மூடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை போலீசார்,
பள்ளிக்கு வந்து பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து, பள்ளி மீண்டும்
திறக்கப்பட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம
மக்களிடம், டி.இ.ஓ., இளங்கோவன் விசாரணை நடத்தினார். அப்போது, தலைமை
ஆசிரியர் ராமதாஸ், ஆசிரியை ராதா ஆகிய இருவரையும், இடமாற்றம் செய்யவேண்டும்
என, அதிகாரிகளிடம், கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...