திருமங்கலம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரும் மனுவுக்கு தமிழக
அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை
உத்தரவிட்டது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த எஸ்.முகமது யூனிஸ் ராஜா தாக்கல் செய்த மனு:
திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் பாதிக்கும்
மேல் சேதமடைந்து உள்ளது. இதனால், பள்ளி வளாகத்தை பொதுவழியைப் போல
பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் சிலர் பள்ளி
வளாகத்தில் மது அருந்துவது உள்ளிட்ட சமுகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு
வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு
மனு செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்தப் பள்ளியைச் சுற்றிலும்
சுற்றுச்சுவர் எழுப்ப உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த
நீதிபதிகள்,மனுவுக்கு பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு
விசாரணையை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...