பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக
நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழங்குடியின நலத்துறை சார்பில் பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரி
ஆசிரியர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில் மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 40 நாள்கள் பயிற்சி
அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி நடைபெறும் 40 நாள்கள் உணவு
வழங்கப்படுவதுடன், பயிற்சிக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.பயிற்சியில்
சேர விரும்புவோர் விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, ஜாதி, பட்டப்படிப்புக்கான
சான்று, ஆதார் அடையாள அட்டை எண் உள்ளிட்ட சான்றுகளுடன் பாஸ்போர்ட்
புகைப்படம் ஒட்டி மின் அஞ்சல் மூலம் tntribalwelfare@yahoo.com என்ற
முகவரிக்கு வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Application yepdi vangurathu...
ReplyDeleteplease conduct DADWO concern District . Only ST
DeleteST ku matum thana illa SC um apply pannalamah..
ReplyDelete