புதுக்கோட்டையில்
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின்
சார்பில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம். பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி நடந்தது.
2016-ம்
ஆண்டு நடைபெற உள்ள கலந்தாய்வில் பதவி உயா்வில் சென்றவா்களுக்கு பல
ஆண்டுகளாக இருந்த நடைமுறையைப் பின்பற்றக்கோருதல், பதவி உயா்வு பெற்ற
முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்வதற்கு
உள்ள தடை ஆணையை நீக்கி உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பதவி உயா்வு
கலந்தாய்வினை உடனடியாக நடத்தக்கோருதல், அவசர அவசரமாக வெளியிட்டுள்ள
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்ணை திரும்பப்பெறக்கோருதல்,
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பதவி உயா்வில் நேரடி நியமனம் பெற்ற முதுகலை
ஆசிரியா் மற்றும் பதவி உயா்வு பெற்ற முதுகலை ஆசிரியா் விகிதம் 1க்கு1 என
நியமிக்கக்கோருதல், 2004-2006 தொகுப்பூதிய காலத்தினை பணியேற்ற நாள்முதல்
பணிவரன்முறை படுத்தக்கோருதல், கால நீட்டிப்பு செய்யாமல் சிபிஎஸ்
திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தினை
நடைமுறைப்படுத்தக் கோருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை
ஸ்ரீபிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நேற்று மாலையில் தமிழ்நாடு
பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினா் அரசின் கவனத்தை
ஈா்க்கும் வகையில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தினை நடத்தினார்கள்.
ஆா்ப்பாட்டத்திற்கு
வந்திருந்த அனைவரையும் தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி
ஆசிரியா் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவா் ஆா்.சரவணன் வரவேற்று
பேசினார். தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்
சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளா் எஸ்.சுரேஷ் ஆா்ப்பாட்டத்திற்கு
தலைமை வகித்தார். தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்
சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவா் எம்.எஸ்.சாலை செந்தில் முன்னிலை
வகித்து பேசினார். தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்
சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் வி.எஸ்.பிச்சைவேல், தமிழ்நாடு உயா்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சங்கத்தின் மாவட்டத்தலைவா்
கே.திராவிடச்செல்வம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின்
மாவட்டத்தலைவா் எம்.மாரிமுத்து, தமிழ்நாடு உயா்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத்தலைவா்
எஸ்.ரெங்கராஜ், தமிழக தமிழாசிரியா் கழகத்தின் மாவட்ட தலைவா் கும.திருப்பதி
ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை வாழ்த்தி பேசினார்கள். ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு
அழைப்பாளராக தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்
சங்கத்தின் மாநிலத்தலைவா் சாமி.சத்தியமூா்த்தி கலந்துகொண்டு கோரிக்கைகளை
வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
ஆா்ப்பாட்டத்தில்
கோரி்க்கைகளை வலியுறுத்தி பேசியும், கோசங்களும் எழுப்பினார்கள். இந்த
ஆா்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனா். நிறைவாக தமிழ்நாடு பதவி
உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாவட்ட பொருளாளா்
எம்.கண்ணன் நன்றி கூறினார்.
- இரா.பகத்சிங்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...