அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு
2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு
சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு,
திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை
பள்ளியில் நடைபெறும்.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) நடைபெறும்.
ஆக. 7-இல் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி
உயர்வு குறித்தும், 13-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல்) குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
20-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல்
(மாவட்டத்துக்குள் மாறுதல்) குறித்த கலந்தாய்வும், 21-ஆம் தேதி அரசு,
நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாறுதல்
குறித்த கலந்தாய்வும் நடைபெறும்.
22-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி
உயர்வு குறித்தும், 23-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள்,
இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள்
மாறுதல் குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
24-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள்,
தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
குறித்த கலந்தாய்வு நடைபெறும்.
27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் நடைபெறும்.
செப்டம்பர் 3-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்துக்குள்)
குறித்தும், 4-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு
மாவட்டம்), 6-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுதல் குறித்து கலந்தாய்வு நடைபெறும்.
sir please upload deployment rules
ReplyDelete