விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்
கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை
ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்
கலந்தாய்வு, விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில்
நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி தலைமை
வகித்தார்.இதில், காலிப் பணியிடங்களான தமிழாசிரியர் 9, ஆங்கில ஆசிரியர் 7,
சமூக அறிவியல் ஆசிரியர் 5-க்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில்,
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கிலம்
மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் 30 பேர் கலந்துகொண்டனர்.அப்போது,
காலியிடங்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனக் கூறி, பட்டதாரி
ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தியை
முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் கூறுகையில், பணிநிரவல் என்ற பெயரில் தமிழாசிரியர்கள் இடம் மாற்றப்படுகிறார்கள். பணிநிரவல் முறையில் ஒருமுறை அடுத்த பள்ளிக்குச் சென்றுவிட்டால், அவர் இளநிலையாளராகவே கருதப்படுகிறார். இதனால், அடுத்தடுத்த பணிநிரவல் கலந்தாய்வுகளிலும் அவரே இடமாற்றம் செய்யப்படுகிறார்.சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்றார்..

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...