தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின்
தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 571
இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆக., 4ம் தேதி;
எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு, 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தேர்வு
கட்டணம் செலுத்தாத, சில கல்லுாரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி
வைக்கப்பட்டன; அந்த கல்லுாரிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம்,
'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒன்பது கல்லுாரிகள், கட்டணம் செலுத்த
அவகாசம் கேட்டுள்ளன. 'பணம் கட்டிய கல்லுாரிகளின் முடிவுகள், திங்கட் கிழமை வெளியாகும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...