அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி
நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட
உள்ளனர்.
தமிழக அரசின் பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை
விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இவர்களை, பணி நிரவல்
என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு,
இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க,
மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
l பள்ளியில்,
9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும்
சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க
வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35
மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105
மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால்,
35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.
கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு
ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர்
மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும்,
அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.
உடற்கல்வி ஆசிரியர்,மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் ஏன் விலக்கு
ReplyDelete
ReplyDeleteகாலியாகவுள்ள தகுதியுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பி இருந்தாலே பெரும்பாலானோர் பணி நிரவலில் இருந்து தப்பித்து இருக்கலாம்.
பணித்துறப்பு செய்தவர்களுக்கு பதிலாக
துணைத்தேர்ந்தோர் பட்டியலில் இருந்து பதவி உயர்வு அளித்த பிறகு பணி நிரவல் செய்தாலும் பெரும்பாலோனர்
பணி நிரவல் தவிர்க்க பட்டிருக்கும்.
குறைந்த்து 100 பள்ளிகளை தரம் உயர்த்தி இருந்து 100x9= 900 பதவி உயர்வு வழங்கி இருந்தாலும்
பணிநிரவல் பாதிப்பு வெகுவாக குறைந்திருக்கும்.
இவையெல்லாம். செய்வதால் அரசுக்கும் பெரிய பொருட்செலவு இல்லை. வெறும் 3% மற்றும் தர ஊதியம் 200 மட்டுமே.
உயர்நிலைப்பள்ளி த. ஆ. பதவி உயர்வு, வரலாறு பாட மு.ஆ. பதவி உயர்வு
நடந்த பிறகு (மாணவர்களின் நலன் கருதி இப்பிரச்சினை உடனடியாக தீர்க்க பட வேண்டும்). பணி நிரவல் செய்து இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அப்பிரச்சனை தீர்க்க வழி இருக்கும் போது ,.......
ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக மாறுதல் அளித்து , மனதிளவில் மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி, கல்வியாண்டில் இடையில் இடமாற்றம் செய்வது .......மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது.
ஆசிரியர் தன் பணியை திறம்பட செய்ய , தேவை பணிப்பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல்,
இப்பணி நிரவலால் பாதிக்கப்பட போவது ஆசிரியர்கள் மட்டுமல்ல..
மாணவர்களும், பள்ளியும் கூடத்தான்.
ReplyDeleteகாலியாகவுள்ள தகுதியுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பி இருந்தாலே, பெரும்பாலானோர் பணி நிரவலில் இருந்து தப்பித்து இருக்கலாம்.
பணித்துறப்பு செய்தவர்களுக்கு பதிலாக
துணைத்தேர்ந்தோர் பட்டியலில் இருந்து பதவி உயர்வு அளித்த பிறகு பணி நிரவல் செய்தாலும் பெரும்பாலோனர்
பணி நிரவல் தவிர்க்க பட்டிருக்கும்.
குறைந்த்து 100 பள்ளிகளை தரம் உயர்த்தி இருந்து 100x9= 900 பதவி உயர்வு வழங்கி இருந்தாலும்
பணிநிரவல் பாதிப்பு வெகுவாக குறைந்திருக்கும்.
இவையெல்லாம். செய்வதால் அரசுக்கும் பெரிய பொருட்செலவு இல்லை. வெறும் 3% மற்றும் தர ஊதியம் 200 மட்டுமே.
உயர்நிலைப்பள்ளி த. ஆ. பதவி உயர்வு, வரலாறு பாட மு.ஆ. பதவி உயர்வு
நடந்த பிறகு (மாணவர்களின் நலன் கருதி இப்பிரச்சினை உடனடியாக தீர்க்க பட வேண்டும்). பணி நிரவல் செய்து இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அப்பிரச்சனை தீர்க்க வழி இருக்கும் போது ,.......
ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக மாறுதல் அளித்து , மனதிளவில் மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி, கல்வியாண்டில் இடையில் இடமாற்றம் செய்வது .......மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது.
ஆசிரியர் தன் பணியை திறம்பட செய்ய , தேவை பணிப்பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல்,
இப்பணி நிரவலால் பாதிக்கப்பட போவது ஆசிரியர்கள் மட்டுமல்ல..
மாணவர்களும், பள்ளியும் கூடத்தான்.
பணி நிரவல் கலந்தாய்வில் கலந்த ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெறலாமா??
ReplyDelete