அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதால், நாள்தோறும் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தனியார்
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் அப்பள்ளிப் பேருந்துகள் மூலம்
செல்கின்றனர். ஆனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் சில
மாணவர்கள் அரசுப் பேருந்தையே பயன்படுத்துகின்றனர்.
இம் மாணவர்கள் மாலை வேளைகளில் பள்ளி முடிந்து தங்களது வீடுகளுக்குச் செல்ல
பேருந்தில் ஏற முயற்சிக்கும்போது, நடத்துநர், ஓட்டுநர் ஏற்ற
மறுக்கின்றனர். மீறி பேருந்தில் ஏறும் மாணவ, மாணவியரை அங்கேயே
இறக்கிவிடுகின்றனர். இதனால், தங்களது புத்தகப் பைகளுடன், அடுத்து வரும்
பேருந்துக்காக சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்கின்றனர். மேலும்,
தங்களது வீடுகளுக்குச் செல்ல காலதாமதமாவதோடு, சிறப்பு வகுப்புகள் செல்ல
முடியாமலும், பள்ளிகளில் அளிக்கும் எழுத்து வேலை உள்ளிட்டவைகளை
செய்யமுடியாமலும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, மாலை வேளைகளில் காரிமங்கலம் வழியாகச் செல்லும் பேருந்தில் மாணவர்களை
ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், அந்த நேரத்தில் கூடுதலாக
பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என
மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...