திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல்
கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல்
மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், 'ஹைபிரிட் கார்'
தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும், பொறியியல் கல்லுாரிகளுக்கு
இடையிலான நவீன தொழில்நுட்ப தயாரிப்பு போட்டியை 'இம்பீரியல் சொசைட்டி ஆப்
இன்னோவேஷன் இன்ஜினியர்ஸ்' என்ற அமைப்பு நடத்துகிறது.இந்தாண்டு முதற்கட்ட
போட்டி ஆந்திராவில், இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. 150 முக்கிய
பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்றன. அதில் பங்கேற்ற, திண்டுக்கல்,
எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள்
தயாரித்த 'ஹை பிரிட் கார்' தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்தது. இந்த
கார், பெட்ரோல் மற்றும் மின்சாரம் என்ற, இரண்டு வகையான ஆற்றலில் இயங்கும்
தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள்
சிக்கனமாவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைகிறது.
இன்ஜின் திறன், 208 சி.சி.,யும், 6.2 குதிரை
சக்தி திறனும் கொண்டது. 3,600 ஆர்.பி.எம்., மற்றும் 12.9 இழுவைத்திறன்
கொண்டது. மணிக்கு, 80 கி.மீ., வேகம் செல்லும். இது பந்தய கார் என்பதால்,
ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம்.லிட்டருக்கு, 35 கி.மீ., துாரம் இயங்கும்.
பாதுகாப்பு அம்சமாக காரில் தீ பிடித்தால்
உடனடியாக அணைக்கும், 'கில் சுவிட்ச்' அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆபத்தான நேரங்களில் விபத்தை தவிர்க்கலாம். எளிதாக இயக்குவதற்கு,
'ஆட்டோமேட்டிக் கிளட்ச்' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக காரின்
வேகத்தை கட்டுப்படுத்தலாம்.
கல்லுாரியின் துறைத்தலைவர் சரவணன், குழு
ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், பிரபாகரன், விக்னேஷ் கூறியதாவது: எங்கள்
கண்டுபிடிப்புக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி. இதன்மூலம்
இன்னும் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை மாணவர்கள் கண்டறிய ஆர்வம்
பிறக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...