ஜூலை 29-இல் வங்கி ஊழியர்களின் ஒரு நாள்
வேலைநிறுத்தம், 31-இல் வங்கி விடுமுறை ஆகிய காரணங்களால் வருமான வரிக்
கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே, அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும்
வருமான வரிக் கணக்கை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை 5.30 வரை கணக்கை
தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வன்முறைச் சூழல் நிலவுவதால்,
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான
கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...