மருத்துவக் கல்வியை முடித்தவர்கள், டாக்டர்களாக பணிபுரிய, 'லைசென்ஸ்'
பெறுவதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவது உட்பட, மருத்துவக் கல்வி
மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளை, இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட
குழு,அரசிடம் அளித்துள்ளது.
திருப்திகரமாக இல்லை: இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள்
குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்து, அறிக்கையை, மார்ச்சில்
தாக்கல் செய்தது. அதில், 'கவுன்சிலின் செயல்பாடுகள் திருப்திகரமாக
இல்லாததால், அதற்கு மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும்' என,
பரிந்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்தப் பரிந்துரைகள் குறித்தும், மருத்துவக் கல்வியை
மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய, 'நிடி ஆயோக்'
துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை, பிரதமர் நரேந்திர
மோடி நியமித்தார்.
இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, முதல்கட்ட அறிக்கையை தாக்கல்
செய்துள்ளது. இது குறித்து பொது மக்கள் மற்றும் தொடர்புடையோரின்
கருத்துக்கள், ஆலோசனைகள் கோரப்பட்டுள் ளன.அதைத் தொடர்ந்து, இந்த
பரிந்துரைகள் மேம்படுத்தப்பட்டு, மசோதாவாக தாக்கல் செய்யப்படும்.
முக்கிய பரிந்துரைகள்:
நிடி ஆயோக் குழு பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்:
* இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்துக்கு மாற்று சட்டம் கொண்டு
வருவதுகுறித்து, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும்
* இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவக் கமிஷனை உருவாக்க வேண்டும்
* மருத்துவக் கல்வி குறித்து ஆலோசனை வழங்க, மருத்துவ ஆலோசனை கவுன்சிலை உருவாக்க வேண்டும்; இதில், மாநிலங்களும் இடம்பெற வேண்டும்
* இளநிலை கல்வி, முதுநிலை கல்வி, மருத்துவக் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு
செய்வது, மருத்துவப்பணி என, தனித்தனியாக நான்கு தன்னாட்சி உள்ள வாரியங்களை
அமைக்க வேண்டும்
* இந்த வாரியங்கள், தேசிய மருத்துவக் கமிஷனின் கீழ் செயல்பட வேண்டும்
* தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான கட்டணத்தை தேசிய மருத்துவக் கமிஷன்
நிர்ணயிக்க வேண்டும். இந்த கட்டண விபரங்கள், கல்லுாரிகளின் இணையதளத்தில்
இடம்பெற வேண்டும்
* 'நீட்' எனப்படும், மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்
* மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவராக பணியாற்ற, 'லைசென்ஸ்'
பெற வேண்டும். இதற்காக, பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். இந்த
நுழைவுத் தேர்வு உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வாகவும் அமையும்
* மருத்துவ, 'சீட்'களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். ஏழை, எளிய,
பிற்படுத்தப் பட்ட மாணவர்களும், மருத்துவக் கல்லுாரி களில் சேரும் வாய்ப்பு
கிடைக்க வேண்டும்
* வாய்ப்புள்ள இடங்களில், மாவட்ட மருத்துவ மனைகள் மற்றும் மிகப் பெரிய
தனியார் மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லுாரி களாக தரம் உயர்த்த வேண்டும்
* டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், லாபம் ஈட்டாத நிறுவனங்களுடன்,
லாபம் ஈட்டும் நிறுவனங்களும், மருத்துவக் கல்லுாரி துவங்க அனுமதிக்கலாம்
* மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள வசதிகள், கல்வி முறைகள் குறித்து
தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு குறித்த அறிக்கைகளை,
இணையதளத்தில் வெளியிட வேண்டும்
* அமெரிக்காவில் உள்ளது போல், பிரபல டாக்டர்களும், தங்கள் மருத்துவப்
பணியைத் தவிர, பேராசிரியர் பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு
பரிந்துரைக் கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...