சிண்டிகேட், செனட் அமைப்புகளில் போட்டியிட அரசு அனுமதி பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டதால் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள்,
15க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் சிண்டிகேட் அமைப்பு
தலைவராக பல்கலை துணைவேந்தரும், செனட் அமைப்பு தலைவராக கல்லூரி
முதல்வர்களும் செயல்படுகின்றனர். இந்த அமைப்புகளின் கூட்டங்களில், பல்கலை
மற்றும் கல்லூரிகளில் நடக்கும் பல ஊழல், முறைகேடு உறுப்பினர்கள் மூலம்
வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை 15ம் தேதி உயர்கல்வித்துறை அரசாணை 137ஐ
வெளியிட்டது. அதில், ‘’அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில்
பணிபுரியும் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிண்டிகேட், செனட்
அமைப்புகளுக்கு போட்டியிடுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும்’’ என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...