பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, சொந்த செலவில் திரை மூலம்
கற்பித்து வருகிறார், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஆசிரியர்
பி.வில்சன் பிரபாகர். வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளி விலங்கியல்
முதுகலை ஆசிரியர் பி.வில்சன் பிரபாகர் கூறியதாவது:
ஏழை மாணவர்கள் அதிக
மதிப்பெண் பெறுவதற்காக, என்னை அழைக்கும் பள்ளிகளில் இலவசமாக புரொஜக்டர்
மூலம் பாடங்களை திரையிட்டு காட்டி வருகிறேன்.
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் ஏராளமான 'சிடி'
வைத்துள்ளேன். இதனால் மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து அதிக மதிப்பெண்
பெற முடிகிறது, என்றார்.இவர் 2014ல் 'தினமலர் லட்சிய ஆசிரியர்' விருதை
பெற்றவர். தமிழக அரசு சார்பில் 'கற்றலில் புதுமை' எனும் தலைப்பில் தேர்வு
செய்யப்பட்ட 100 ஆசிரியர்களில், 33 பேர் தனித்திறமையால் பாடம் நடத்தும்
வீடியோவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் இவர் பாடம்
நடத்துவதும் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...