அரசு
பள்ளி ஆசிரியர்கள் பணி செய்யாமல், 'ஓபி' அடிப்பதை தடுக்கவும்,
வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்தவும், பள்ளிகளில், 'பயோ
மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது;
இதற்கான அறிவிப்பை, சட்டசபை யில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
நான்கு
ஆண்டுகளுக்கும் மேலாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்,
அரசு பள்ளி மாணவர்கள், மாநில, 'ரேங்க்' பெற வில்லை. ஆசிரியர்களின்
கவனக்குறைவு; முறையாக பாடம் நடத்தாமை; 'டியூஷன்' நடத்துதல்; அதிகாரிகள்
பெயரைச் சொல்லி பள்ளிக்கு வராமல், 'ஓபி' அடித்தல்; வருகைப் பதிவேட்டில்
கையெழுத்து போட்டுவிட்டு,சொந்த
வேலையைப் பார்க்கச் செல்வது காலை, மாலை சிறப்பு வகுப்புகளை நடத்தா மல்
இருப்பது போன்றவையே, தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என தெரிய வந்தது.
எனவே, ஆசிரியர்களின் பள்ளி வருகையை யும், பள்ளியில் இருப்பதையும் உறுதிப்படுத் தவும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறைக்கு, கடந்த ஆண்டே கல்வித் துறை திட்டமிட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில், 2015 மார்ச், 11ல்,செய்தி வெளியானது.
தேர்தலால் இந்த அறிவிப்பு தள்ளி போடப்பட்டு, சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தால், ஆசிரியர்கள், 'ஓபி' அடிக்கும் முறை தடுக்கப்படும். உயர் அதிகாரிகளின் வேலையை பார்க்கச் செல்வதாகவும், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் செல்வதாகவும் கூறி ஆசிரியர்கள் வெளியே சுற்றுவது இனி குறையும். அதிகாரிகளும், தங்கள் சொந்த வேலைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது தடுக்கப்படும்.
மேலும் பயோ மெட்ரிக் பதிவு பயன்படுத்தப்பட உள்ளதால், பள்ளிக்கு வருவதாகக் கூறி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, சினிமா தியேட்டருக்கும், ஊர் சுற்றவும் செல்லும் மாணவர்கள் இனி மாட்டிக் கொள்வர். மாணவர்களின் வருகை குறித்த ஆதாரத் துடன், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டமும் நடத்த முடியும் என்பதால் இதற்கு, கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
அதே நேரம், பயோ மெட்ரிக் கருவியில், வருகையை பதிவு செய்து விட்டு, ஆசிரியரோ, மாணவரோ,பள்ளியிலிருந்து வெளியே சென்று விட்டு, மாலையில் வந்து மீண்டும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.இதுபோன்ற விதி மீறலுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வரவேற்புக்குரியது!புதிய திட்டம் குறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட் கூறும் போது, ''ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, மின்னணு கல்வி மேலாண்மை, கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ் போன்ற திட்டங் களுக்கு தகவல் தொகுப்பாக பயன்படுத்த எளிதாக இருக்கும்,'' என்றார்.
nalla muyarchi.... aanal nam arasu palli aasiriyargal antha bio mertic mechini 10 naalukul repaire seithu athu velai seiyavillai endru oru arikkai sollivittu palaya kurudi kathai thaan thodarum.... athavathu FUTURE ATTENDANCE...
ReplyDelete