கடைகளில் மட்டும் பொருட்களை விற்பனை செய்வோரை விட, ‘ஆன்லைன்’
எனப்படும், வலைதளம் மூலமாகவும் பொருட்களை விற்பனை செய்வோர், அதிகம்
சம்பாதிக்கின்றனர்.
இது, அமெரிக்க முன்னணி ஆடை நிறுவனம் ஒன்றின் சில்லரை விற்பனை குறித்து, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலை விரிவுரையாளர் ஜுங்சா மா தலைமையிலான குழு, மேற்கொண்ட ஆய்வில், தெரியவந்துள்ளது.
அதன் விபரம்: அமெரிக்க நிறுவனம், முக்கிய பொருட்களின் விபரங்கள் அச்சிட்ட விலை பட்டியலை, நுகர்வோருக்கு வழங்கி வருகிறது. அதேசமயம், பட்டியலில் குறைந்த அளவில் இடம் பெற்ற, அல்லது இடம் பெறாத சிறிய பொருட்களை, அதன் வலை தளத்தில் வெளியிடுகிறது.
சிறிய பொருட்கள் :இந்த, இரு வகை பொருட்களையும் ஆராய்ந்து முடிவு செய்ய, வலைதள பார்வையாளர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதை விட, கடையில் வழங்கப்படும் விலை பட்டியலை பார்ப்பதற்கு குறைந்த நேரத்தையே, நுகர்வோர் ஒதுக்குகின்றனர்.கடையில் பொருட்களை வாங்குவதற்காக செய்யும் மொத்த செலவில், சிறிய வகை பொருட்களின் பங்கு, 2.5 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது; அதேசமயம், வலைதளம் மூலம் பொருட்களை வாங்குவோரின் மொத்த செலவில், சிறிய பொருட்களின் பங்கு, 8.4 சதவீதம் என்ற அளவில் அதிகமாக உள்ளது.
அச்சடிக்கப்பட்ட விலை :பட்டியலில், விரைவாக விற்பனையாகும் பொருட்களே, பிரதானமாக உள்ளன. முக்கியமற்றவை, பட்டியலின் இறுதிப்பகுதிக்கு தள்ளப்படுகின்றன. ஆனால், வலைதளத்தில், அனைத்து சிறிய பொருட்களும் பட்டியலிடப்படுவதால், அவை, நுகர்வோர் பார்வையில் இருந்து தப்புவதில்லை. அதனால், அவ்வகை பொருட்கள், கடைகளை விட, வலைதளம் மூலம் அதிகம் விற்பனையாகின்றன. இதற்கு, வலைதளத்தில் உள்ள, ‘செர்ச்’ என்ற, தேடும் பிரிவும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இப்பிரிவில், வாங்க உள்ள பொருளின் பெயரை குறிப்பிட்டால், உடனடியாக அதன் இருப்பு நிலவரம், விலை உள்ளிட்ட விபரங்கள் கிடைத்து விடுகின்றன.
கூடுதல் வருவாய் :அதனால், அப்பொருளை, நுகர்வோர் சுலபமாக வாங்குகின்றனர். இதன் மூலம், நுகர்வோர் மட்டுமின்றி, நிறுவனமும் பயன் அடைகிறது. நிறுவனம், வலைதளம் வாயிலான விற்பனையில், கூடுதலாக வருவாய் ஈட்ட துணை புரிகிறது. கடைகளை மட்டும் நம்பியிராமல், அவற்றுடன், வலைதளத்திலும் பொருட்களை விற்பனை செய்வதால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...