Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகம்

         'தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்
ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்
உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, 'வீடியோ கான்பரன்ஸ்' ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்
மதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்
அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல்
கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்
அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும்,
50 கோடி ரூபாய் செலவில்
கட்டப்படும்
அண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்
மதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும்.
சூரிய மின் ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், 'வைபை' வசதி, 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். விடுதி மேம்பாட்டு பணிகள், 1 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர்
அறிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive