ஐ.டி.பி.ஐ.
என்று மக்களால் அழைக்கப்படும் இவ்வங்கி மறு நிதி உதவிகளை மட்டும் வழங்கி
வந்தது.
தொடர்பு கொள்ள: இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India - IDBI) மண்டல அலுவலகம், No.44/86, 4th Avenue, Near R3 Police Station, Ashok Nagar, Chennai-600083. Phone number: 044-28258116. வலைத்தளம்: www.idbi.com
சிறுதொழில்களுக்கான வளர்ச்சி வங்கி
மத்திய அரசின் சிறுதொழில்களுக்கான கடன் உத்திரவாத திட்டம் (Credit Guarantee Fund Scheme) பழைய / புதிய சிறு தொழில்களுக்கு, குறுந்தொழில்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதை ‘சிட்பி’ என அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி நடைமுறைப்படுத்துகிறது. இதர வங்கிகள் மூலம் வழங்கப்படும் இயந்திரக் கடன்/நடைமுறை
மூலதனக் கடன் என ரூ.1 கோடி வரை இத்திட்டத்தில் வழங்கப்படும். முழு விவரம், விண்ணப்பம் பெற www.cgtsi.org.in என்ற வலைதளத்தைப் பார்க்கலாம். சிறுதொழில் வளர்ச்சி வங்கிக் கிளைகளின் முழு விவரத்தை www.sidbi.org எனும் வலைதளத்தில் பெறலாம்.
பெண் தொழில் முனைவோர்கள் சிறப்புக் கடன் திட்டம்
தமிழ்நாடு அரசு பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க இந்தச்சிறப்புத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் வரை தயாரிப்பு / சிறுதொழில் / ரிப்பேரிங் சர்வீஸ் / வியாபாரம் போன்ற தொழில் தொடங்க கடன் அளிக்கப்படுகிறது.வலைத்தளம்: www.tn.gov.in
தமிழ்நாடு மரபுசாரா மின்சார முகமை மூலம் கடனுதவித் திட்டங்கள்
பெரிய தொழில் முனைவோர், ஊராட்சிகள், நிதி நிறுவனங்கள், தனியார் என எவரும் ‘காற்றாலை மின்சாரம்’ தயாரிக்க காற்றாலை நிறுவலாம். காற்றாலை மின்சார நிலையம் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கிறது.அதேபோல் சூரிய சக்தி மின்சாரம் எடுக்க அரசு மானியம், கடனுதவி அளிக்கிறது. சூரிய சக்தி அடுப்புகள் நிறுவ 30% மானியம் அளிக்கப்படுகிறது.
கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்க, கரும்பாலைக் கழிவில் இருந்து மின்சாரம் எடுக்க மானியத்துடன் கடன் அளிக்கப்படுகிறது. இதுபோல் கிடைக்கும் சலுகைகளை தொழில் முனைவோர் பயன்படுத்தி முன்னேறலாம்.தொடர்பு கொள்ள: தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை, தமிழ்நாடு அரசு, 5வது மாடி, ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை - 6. தொலைபேசி: 044- 28224830, மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் (மரபு சாரா எரிசக்தித் துறை) தலைமை பொறியாளர், எண்: 800, அண்ணாசாலை, சென்னை-2. தொலைபேசி: 044-28520167. www.tn.gov.in. இந்திய அரசின் மரபுசாரா எரிசக்தி ஏஜன்சி, (Indian Renewable Energy Development Agency Ltd) Govt. of India. India Habital Centre Complex, Core - 41, Eastcourt, 1st Floor, Lodi Road, New Delhi -3) Phone : 011-24682214
மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் கடனுதவித் திட்டங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படும். காலால் இயக்க முடியாதவர்களுக்கும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும். வியாபாரம் செய்ய விரும்புவோருக்குப் பெட்டிக் கடைகள் வைக்க உதவி செய்யப்படும். தொழில் தொடங்க மானியக்கடன் வழங்கப்படும். தொடர்புகொள்ள: இயக்குநர், மாற்றுத்திறனாளிகள், மறுவாழ்வுத் துறை தமிழ்நாடு அரசு, 15/1, மாடல் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வலைத்தளம்: www.tn.gov.in
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு சுயதொழில் கடனுதவி
முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. அதற்கு கீழே உள்ள இயக்குநர் அல்லது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள உதவி இயக்குநர்களையோ அணுகலாம்.தொடர்பு கொள்ள: இயக்குநர், முன்னாள் ராணுவ வீரர் நலத்துறை, தமிழ்நாடு அரசு, 22, ராஜா முத்தையா சாலை, சென்னை-3. தொலைபேசி: 044-25322487 வலைதளம்: www.tn.gov.in
பட்டு வளர்த்தல், நூற்றல், உற்பத்தி மற்றும் சிறப்புக் கடன் திட்டங்கள்
இந்திய அரசின் மத்திய பட்டு வாரியமும், தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சித்துறையும் ‘பட்டு நெய்தல்’ துறைக்குப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. பட்டுப் புழு வளர்ப்பு, அதற்குரிய மானிய உதவிகள் ‘சில்க் ரீலிங்’ எனப்படும் பட்டு நூல் நெய்து நூலாக்குதல், பட்டு நெசவு, அதற்கான பயிற்சி மற்றும் தயாரிப்புக்குப் பின் விற்பனைக்கு ஆலோசனை எனப் பல வகைகளில் உதவுகின்றனர்.தொடர்பு கொள்ள: இயக்குநர், பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு, போல்க் காம்பவுண்டு, அணைமேடு, ேசலம்-1, தொலைபேசி:
0427-2296831. வலைத்தளம்: www.tnsericulture.gov.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...