Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்

          மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தில்லியில் பிரகாஷ் ஜாவடேகரை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை காலையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தங்கம் செல்வராஜ், ராஜகுமார், வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி, ஆலந்தூர் கணேசன், டி. கண்ணன், பரப்பாடி ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன், ஏலங்குளம் எட்வின், ஏ. முத்துகுமார் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 12 பேர் சந்தித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் பிரகாஷ் ஜாவடேகரிடம் அழைத்துச் சென்றார்.
இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வழக்குரைஞர் ரவீந்திர துரைசாமி கூறியதாவது: சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 168, 169 ஆகிய பக்கங்களில் நாடார் சமுதாய வரலாறு தொடர்புடைய பத்திகளில் "இடம் பெயர்ந்த சமூகம்' எனக் குறிப்பிடும் வரிகள் உள்ளன. நாடார் சமுதாயம் இடம் பெயர்ந்த சமூகமாக இருக்க முடியாது. அந்தப் புத்தகத்தை எழுதிய மலையாள எழுத்தாளர் உள்நோக்கத்துடன் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கருதுகிறோம். சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்கக் கோரி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தில்லியில் மத்திய அமைச்சர் ஜாவடேகரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்.
மேலும், தமிழகத்தில் பெண்கள் மார்பகப் பகுதிகளை மறைக்கும் வகையில் தோள் சீலை அணியும் போராட்டத்தை அக்காலத்தில் முன்னெடுத்த வைகுண்டர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பாட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம்.
ஒரு முதலமைச்சராகவும் இதர பிற்படுத்த மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தவருமாகவும் திகழ்ந்த காமராஜரின் பெயரை மதிய உணவுத் திட்டத்துக்கு வைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்றார் ரவீந்திர துரைசாமி.
தமிழிசை நம்பிக்கை:
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தமிழசை கூறியது: சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் காமராஜர் பற்றி இடம் பெற்றுள்ள பிழையான தகவலை நீக்கவும், மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சரித்திரத்தில் இடம் பெற்ற வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மாநிலங்களில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எதிர்கால தலைமுறைக்கு மறைக்காமலும் இருட்டடிப்பு செய்யாமலும் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகள் பலரின் வரலாறும் தியாகங்களும் மறைக்கப்பட்டன. அதற்கு பாஜக ஒருபோதும் இடம் கொடுக்காது என்றார் தமிழிசை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive