Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம்

        வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
 
       வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப்.1) முதல் வைக்கப்படுகிறது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்கலாம்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருப்பது அவசியம்.
எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதற்கென இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சிறப்பு முகாம்கள்:
வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம்.
மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.
இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
என்ன படிவம்... எந்த ஆவணம்?
முதல் முறையாகப் பெயர் சேர்க்கவும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 6.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட விரும்பினால் படிவம் 6ஏ.
ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க படிவம் 7.
பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய விரும்பினால் படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.
இருப்பிடச் சான்றாக ஆறு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.
வங்கி-கிசான்-அஞ்சல் அலுவலக நடப்புக் கணக்குக் கையேடு.
விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை-கடவுச் சீட்டு-ஓட்டுநர் உரிமம்-வருமான வரி விதிப்பு ஆணை.
விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது.
விண்ணப்பப் படிவத்தில் கொடுத்துள்ள முகவரியில் விண்ணப்பதாரரின் பெயருக்கு வந்து சேர்ந்த தபால் துறையின் தபால்கள்.வாடகை ஒப்பந்தம்.ஆதார் கடிதம்.
இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடம் (வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதி), வாக்குச் சாவடி நிலை அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் அளிக்கலாம்.
www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive