ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல்
கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில்
கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும்
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி,
நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி களில் பணியாற்றும் தலைமை ஆசிரி யர்கள்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரி யர்கள், கணினி ஆசிரியர் கள்,
உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கான பொதுஇடமா
றுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 8-ம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்கள்,
தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாவட்டத்து க்குள்ளும்
மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு ஆகஸ்டு 9-ம் தேதி
அன்றும் காலை 10 மணியளவில்அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறும். பொது இடமாறுதல்
கோரி ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்த கலந்தாய்வில் கலந்து
கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Adw 30% list eppo sir viduvanga.Mathurai court judgement solliyum yen late pandranga.ithai ketkka yarume illaiya.pls reply me sir.
ReplyDelete