சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை
கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின், 70வது சுதந்திர தினம் வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, 23ம் தேதி வரை, இரண்டு வார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்யுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பள்ளி, கல்லுாரிகளில்,
நேற்று முன்தினம் முதல், சுதந்திர தின நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.
எல்லை பாதுகாப்பு
வீரர்களுக்கு, வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்புதல்; மரக்கன்றுகள் நடுதல்;
விடுதலை போராட்டத்தை நினைவுகூரும் சொற்பொழிவுகள் நடத்துதல் போன்ற
நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இரண்டு வார நிகழ்ச்சிகளின் நிறைவாக, ஆக.,
23ல், நாடு முழுவதும் காலை, 11:00 மணிக்கு, அனைத்து மாணவ, மாணவியரும் தேசிய
கீதத்தை வாய் பாட்டாக பாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...