திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம்
விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல்
பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை
ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல்
கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை
நடைபெற்றது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ்
மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய
- ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.
ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ்,
ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால்
61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும்
வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில்
இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல்
பெற்றுள்ளனர்.
இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஞாயிற்றுக்கிழமை (ஆக.21)
நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம்
ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...