தமிழகத்தில் பொறியியல் படிப்பின் தரம் குறித்த ஆய்வில், மூன்றில் ஒரு
மாணவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை என்பதும், அரியர்
தேர்வுகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம்
வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த 2016 மே மாதம்
தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் படித்து
தேர்ச்சி பெற்ற 1லட்சத்து 57 ஆயிரம் மாணவ, மாணவிகளில் 48,139 பேர் அரியர்
தேர்வுகள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம், ஒட்டுமொத்தமாக
தேர்ச்சி பெற்றவர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் 4 ஆண்டுகளில்
பொறியியல் படிப்பை நிறைவு செய்யாத அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.இதே
புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, முதுநிலை மற்றும் டிப்ளமா
படிப்புகளின் தேர்ச்சி விகிதம் பொறியியல் படிப்பை விட படுமோசமாக
உள்ளது.கடந்த மே மாதம் தங்களது படிப்புகளை முடித்த முதுநிலை மற்றும்
டிப்ளமோ மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் அரியர் தேர்வுகளை
வைத்திருக்கின்றனர்.
இந்த நிலை கடந்த கல்வியாண்டில் மட்டுமல்லாமல், 2012-13ம் கல்வியாண்டு முதலே தொடர்கதையாகி வருகிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல தமிழகத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதும் அதன் காரணமாக மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களும் எளிதாக பொறியியல் படிப்பில் சேர முடிந்ததுமே இதுபோன்ற நிலைக்கு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.மேலும், பல மாணவர்கள் பொறியியல் படிப்பில் ஆர்வமில்லாமல், பெற்றோரின் வற்புறுத்தலால் சேர்ந்துவிடுவதும், சில கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாததும் கூட இந்த நிலைக்குக் காரணங்களாக அமைந்து விடுகின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...