தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி
ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த
நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக
விருதுகள் அறிவிக்கின்றன.
இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று
அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள்
வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரி
பள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர்
வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம்,
செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில்
இடம் பெற்று உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...