Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல்.

      கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல் பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
          முதல்-அமைச்சரின் ஆணைப்படி 2016-17 கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 13-08-2016 அன்று(நேற்று) அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.காலையில் 642 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற விண்ணப்பித்து இருந்தனர். இதில் 227 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்திற்குள் மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். இதே போன்று பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய்வில் 152 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாங்கள் தற்போது பணிபுரியும் மாவட்டத்தில்இருந்து வேறு மாவட்டத்திற்கு விருப்பத்திற்கேற்ப மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.

மேற்கண்ட கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடைபெற்றது. ஆக மொத்தம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பணியிடங்களை தேர்வுசெய்து பொது மாறுதல் ஆணையை பெற்றுள்ளார்கள். இப்பணிகள் சரியாக நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குனர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மேற்பார்வையிட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive