அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர்
பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து,அரியலூர்
கோட்டாட்சியர் மோகனராஜன்,உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஆகியோர்
சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
உடையார்பாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 22 பணியிடத்துக்கும்,செந்துறை
வட்டத்தில் காலியாக உள்ள 5 பணியிடத்துக்கும்,அரியலூர் வட்டத்தில் காலியாக
உள்ள 10பணியிடத்துக்கும்,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்ட
இனத்தவர்கள் மற்றும் அந்தந்த வட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.அரசு
அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 21
வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு
உட்பட்டவராகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,அருந்ததியினர் மற்றும்
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரப்பினர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்,தமிழிலில் எழுத,படிக்க
தெரிந்திருக்க வேண்டும். ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்திருத்தல்
கூடாது,குற்றவியல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவராக இருத்தல்
கூடாது,நேர்காணலுக்கு அழைக்கும் போது, நன்னடத்தைச் சான்று,உடற்தகுதிக்கான
அரசு மருத்துவரிடம் பெற்ற சான்று,கல்வித்தகுதிக்கான சான்றுதள்,வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதற்கான பதிவு அட்டை ஆகியவை
சமர்பிக்க வேண்டும்ஒரு வெள்ளைத்தாளில் பெயர்,முகவரி,கல்வித்தகுதி மற்றும்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன்பாஸ்போர்ட் அளவிலான
புகைப்படம் ஒட்டப்பட்டு நகல் சான்றிதழ்கலை இணைத்து சுய முகவரியிட்ட
ரூ.30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் கூடிய அந்ததந்த வட்டாட்சியர்
அலுவலகங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை5 மணிக்குள் கிடைக்கும் வகையில்
விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...