உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கான்பூர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் ''பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உட்பட இதுவரை சுமார் 5 லட்சம் பேர் இந்த பணிக்காக விண்ணப்பித்துள்ளனர். வரும் நாட்களில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தொடலாம்'' என்று தெரிவித்தார்.
ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் 1,500 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும் மற்ற இடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையி்லும் நிரப்பப்பட உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...