எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க
முக்கிய பாடங்கள் டி.வி.டி.யாக தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும்
அனுப்பப்படுகிறது.
டி.வி.டி.யில் பாடங்கள் தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்
கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதில் ஒரு நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் எளிதில்
புரிந்துகொள்ளும் வகையில் முக்கிய பாடங்கள் டி.வி.டி.யாக தயாரிக்கப்பட்டு
உள்ளது.கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்
போன்ற பாடங்களில் உள்ள முக்கிய பகுதிகள் டி.வி.டி.யில்
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ, வீடியோகாட்சிகள் அடங்கிய டி.வி.டி.க்களை
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி இந்த டி.வி.டி.க்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பப்பட
உள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு இவை அனுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள்
பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டரில் அந்த டி.வி.டி.யை பயன்படுத்தி
மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். இதன்மூலம் மாணவர்களுக்கு அந்த
பாடங்கள் நன்றாக மனதில் பதியும்.
இந்த டி.வி.டி.யை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பது தொடர்பாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட அரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதல்கட்டமாக 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அந்த ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியை இதர ஆசிரியர்களுக்கு பகிர்ந்துகொள்வார்கள். இதன்மூலம் அரசுபள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...