Home »
» பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
பிளஸ்
2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று
முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை
தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல்,
2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள்
நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
இதே
இணையதளம் மூலம், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 9 காலை, 10:00 முதல், 10ம் தேதி மாலை, 5:00
மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...