தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைய உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தெரிவித்தார்.
கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த
பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர்
ஐக்கிய சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் (மு.செ.கணேசன் பிரிவு)
ஆகிய 2 சங்கங்களும் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான இணைப்பு விழா
வரும் 27-ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.
பொதுச் சங்கங்கள்
ஒன்றிணைவதால் சங்கங்களின் கோரிக்கைகள் வலுப்பெறும் என்பதால், கொள்கை
அடிப்படையில் இந்த இணைப்பு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
சங்கத்தின் சார்பு சங்கமான டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு
விழுப்புரத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவதால்
வேலை இழக்கும் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்களில்
கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தாற்காலிமாக
பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்துவோம். செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய
வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் அதன்
இணைப்புச் சங்கங்களும் பங்கேற்கும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...