''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம்
தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார்.
இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.
விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யா துவக்கி
வைக்கிறார். ஆக., 16 முதல் 18ம் தேதிவரை அகில இந்திய மாநாடு
நடத்தப்படுகிறது.சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர்கள் கூறியதாவது: மத்திய
அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 26
ஆயிரமாக உயர்த்த வேண்டும் என போராடி வருகிறோம். இது தொடர்பாக, மத்திய
அமைச்சர்களுடன்பேச்சு நடத்தியும், இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, வரும், செப்., 2ம் தேதி முழு வேலை
நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இது குறித்து, மாநாட்டில் பேசி
முடிவு செய்வோம். அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள், 45க்கும் மேற்பட்ட அகில
இந்திய சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த
உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர். இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...