தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார்
அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க
கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில்
விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.
இதற்கான பதிவுகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்பட
உள்ளது. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களை தொகுத்து வழங்க வேண்டும், ஆதார்
பதிவு ெசய்யும் மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 25ம் தேதிக்குள்
ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடக்க
கல்வித்துறையில் ஆதார் விவரங்களை ஒன்றியம் வாரியாக தொடக்க கல்வித்துறை
இயக்ககத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடக்க
கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Aided school vacancies in chennai
ReplyDelete1. Maths mbc male-2 vacancies
2. Maths mbc female -1
3. Maths sc male/female -1
4. Science sc male/female-1
Contact 8883229272