Home »
» ஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி
கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பல மாவட்டங்களில் நாளை மறுநாள் உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடிஅமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் கடலில்
புனித நீராடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம்
திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை
முன்னிட்டு காஞ்சிபுரத்திலும் ஆகஸ்ட் 2ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யவும் தமிழகத்தின்
அனைத்துக் கோயில்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பும்,
கண்காணிப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும்
ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆகஸ்ட் 5 ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் ஆடித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய
தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...