'குரூப் - 1' பதவிக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின், 'ரேங்க்' பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறையில், சப் - கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித் துறை கமிஷனர் உள்ளிட்ட, குரூப் - 1 பதவியில், 79 காலியிடங்களுக்கு, ஜூன் மாதம் முதன்மை தேர்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு, ஜூலையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.நேர்முகத் தேர்வுக்கு, 163 பேர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான, 'ரேங்க்' பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் நேற்று வெளியானது. இதில், 87 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...