தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம்
ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185
ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும்
சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,யில்
மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி
நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய்
கட்டணத்தில், இங்கு படிக்கலாம்.
இதுகுறித்து, கிண்டி, அரசு ஐ.டி.ஐ.,
முதல்வர் ஹேமலதா கூறியதாவது: ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு இருந்த, 125
இடங்கள், 316 இடங்களாக உயர்ந்துள்ளன. ஓராண்டு படிப்பில், 9,000 ரூபாய்
சம்பளத்தில், 'அப்ரன்டிஸ்' என்ற, பணியிடை பயிற்சி தரப்படும். கட்டணம், 185
ரூபாய்தான். மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும், பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்கு உட்பட்ட, ஆண், பெண் சேரலாம். இங்கு பயிற்சி
பெற்ற, 326 பேர், பிரபல ஓட்டல்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இலவச உணவு,
விடுதி வசதி உண்டு. இதுபோன்று, 16 விதமான தொழில் பயிற்சிகள் உள்ளன. மாணவர்
சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 29 முதல், 31 வரை, வடசென்னை ஐ.டி.ஐ.,யில் நடக்க
உள்ளது. இதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் மூலம், ஆக., 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்
விவரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...