அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்
விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை
பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் (மதுரை) செல்வக்குமார்
தெரிவித்துள்ளது: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு கள்ளர் பள்ளிகள்
மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்
மற்றும் காப்பாளர்களுக்கு 2016- 17 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய
பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.26 மற்றும் 27 ஆகிய 2
நாள்கள் மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் மேனிலைப் பள்ளி
வளாகத்தில் நடைபெறும். ஆக.26 ஆம் தேதி, மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்,
நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு
கலந்தாய்வு நடைபெறும். ஆக.27 ஆம் தேதி முற்பகல் தமிழாசிரியர் மாறுதல்,
பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் மாறுதல், பிற்பகலில் தொடக்கப் பள்ளித்
தலைமையாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடைநிலை ஆசிரியர் (1 முதல் 5
ஆம் வகுப்பு) இடைநிலைக் காப்பாளர் மாறுதல் மற்றும் சிறப்பாசிரியர்
மாறுதலும் நடைபெற உள்ளது.
முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் ஆக.18 ஆம் தேதி மாலை 5
மணிக்குள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய முன்னுரிமை வழங்கப்படும்.
அதன்பின்னர் வரும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...