அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஆட்சிமொழி குறித்த பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 முதல் நடைபெறவுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட்
17, 18 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து,
நாகப்பட்டினம், தஞ்சாவூர், ஈரோடு உள்பட பிற மாவட்டங்களிலும்
நடத்தப்படவுள்ளன.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழை முழு அளவில் பயன்படுத்தி அரசு
நிர்வாகத்தை திறம்பட நடத்த, ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அரசு அலுவலகங்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள், உதவியாளர் போன்ற நிலைகளில்
பணியாற்றும் ஊழியர்களும், கருத்தரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்களும்
பங்கேற்கவுள்ளனர்.
இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம்,
செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும்
தமிழில் மட்டுமே சுருக்கொப்பம், கையொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து
நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க அரசாணைகள் மற்றும் பட்டறிவும்
எடுத்துரைக்கப்படும்.
தமிழறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியும் கருத்துரையும் வழங்க உள்ளார்கள்.
தாய்மொழி நாளான 2017 பிப்ரவரி 21-இல் செனையில் இந்தப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...