தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும்
வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசி
("லேண்ட்லைன்') மூலம் செய்யும் அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்று
பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
தரைவழி தொலைபேசி, செல்லிடப்பேசி என எந்த
வகையான தொலைத்தொடர்பு இணைப்புக்கு ஞாயிற்றுக்கிழமை பேசினால் இனி கட்டணம்
கிடையாது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி மூலம்
செய்யப்படும் எந்த அழைப்புக்கும் கட்டணம் கிடையாது என ஏற்கெனவே உள்ள
சலுகையும் தொடரும் என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...