சென்னை: தட்டச்சு தேர்வுக்கு, ஒரு வாரமே உள்ள நிலையில், நுழைவுச்சீட்டு
இன்னும் வராததால், தேர்வு எழுத உள்ள, 1.50 லட்சம் மாணவ, மாணவியர்
பதைபதைப்புடன் உள்ளனர்.
வரும், 27, 28ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், தட்டச்சு தேர்வு நடைபெறும்
என,அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, நேற்று
வரை, தேர்வு நுழைவுச்சீட்டு வரவில்லை. தேர்வு எழுத உள்ள, 1.50 லட்சம் மாணவ,
மாணவியர், எப்போது நுழைவுச்சீட்டு வரும் என, காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சி மாவட்ட அனைத்து சமுதாய நல பாதுகாப்பு சங்கத் தலைவர்
எம்.எஸ்.குமார் கூறுகையில், ''ஆள் பற்றாக்குறை காரணம் என, அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர். நுழைவுச்சீட்டை விரைவாக அனுப்பவும், தேர்வுகள்
தரத்துடன், முறையாக நடக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர்
அலுவலகத்திற்கு மனு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...