திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக உதவிப்
பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 10ஆம் தேதி
நடைபெறஉள்ளது.இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்
பல்கலைக்கழகநிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும்
புள்ளியியல்} தகவல் தொழில்நுட்பவியல் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கு
பாடங்களைக் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் விதிகளின்படி
கல்வித் தகுதி உள்ளவர்கள் தாற்காலிக உதவிப் பேராசிரியர் பணியில் சேரலாம்.
இதற்கான நேர்முகத் தேர்வுபுதன்கிழமை (ஆக.10) அபிஷேகப்பட்டியில் உள்ள
பல்கலைக்கழக புள்ளியில் துறையில் நடைபெற உள்ளது.
நேர்முகத் தேர்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (2 புகைப்படம், 2 சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள்) பங்கேற்க வேண்டும்.தகவல் தொழில்நுட்பவியலில் முதுநிலை அறிவியல் பட்டம் அடிப்படைத் தகுதியாகவும், புள்ளியியல் மற்றும் புள்ளியியல் மென்பொருள் பயன்பாடு குறித்த சிறப்பு அறிவு விரும்பத்தக்கத் தகுதியாகவும் கொள்ளப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...