'நல்லாசிரியர் விருது பெறும்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு, 5,000 ரூபாயில் இருந்து, 10
ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
● நடப்பாண்டு,
ஐந்து புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்; மூன்று தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகளாகவும்; 19 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்
பள்ளிகளாகவும், தரம் உயர்த்தப்படும்
புதிதாக
துவக்கப்படும், தொடக்கப் பள்ளிகளுக்கு, 10 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்;
தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஒன்பது பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள்; உயர்நிலைப் பள்ளிகளுக்கு, 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்புகள், 28 கோடி
ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்
● நடப்பாண்டில்,
61 கோடி ரூபாய் செலவில், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள்
ஏற்படுத்தப்படும். 555 அரசு நடுநிலைப் பள்ளிகளில், மூன்று கம்ப்யூட்டர்கள்
கொண்ட, கம்ப்யூட்டர் வழிக்கற்றல் மையங்கள்
உருவாக்கப்படும்
● சென்னை பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியில், தலா ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும்
● சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலுார், கடலுார், நாகப்பட்டினம்,
தஞ்சாவூர், துாத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, 7,000 அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிதாக தயார் செய்யப்பட்ட,
எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள், 5
கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்
● மலைப்
பிரதேசங்களில், முதல் வகுப்பில் இருந்து, 8ம் வகுப்பு வரை, அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மழைக் காலங்களில் எவ்வித
சிரமமும் இன்றி பள்ளி செல்ல, மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள், 8 கோடி
ரூபாய் செலவில்
வழங்கப்படும்
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை
படிக்கும் மாணவர்கள், வாசித்தல் மற்றும் பொது அறிவுத் திறனை மேம்படுத்த,
வாசிப்புத் திறன் மேம்பாட்டுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்
● மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில், கையெழுத்திடும் நடைமுறையை
மாற்றி, 'பயோ மெட்ரிக்' கருவிகளைக் கொண்ட வருகைப் பதிவேடு, முதன் முறையாக
அறிமுகப்படுத்தப்படும். இதற்கென, 46 கோடி ரூபாய் செலவிடப்படும்
● மாணவர்கள்
புதிய முறையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக, வகுப்பறைகளில் உள்ள சுவர்களில்,
பாடம் தொடர்புடைய வண்ண சுவர் சித்திரங்கள், 11 கோடி ரூபாய் செலவில்
வரையப்படும்
● தமிழக
மாணவர்களுக்கு, தரமான கற்பித்தலை அளிக்க, இன்றைய தகவல் தொழில்நுட்ப
வசதிகளைக் கொண்டு, மெய்நிகர் வகுப்பறை எனப்படும் இணையவழி வகுப்பறைகள்
ஏற்படுத்தப்படும்.
முதல்
கட்டமாக, 770 அரசு பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி
நிறுவனங்களிலும், இணையவழி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். இதற்காக, கோவை,
பெரம்பலுார், தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனங்களுக்கு, 33 கோடி ரூபாய் செலவில், உட்கட்டமைப்பு வசதி
ஏற்படுத்தப்படும்
● நல்லாசிரியர்
விருது பெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ரொக்கப் பரிசு, 5,000
ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...