Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்

      ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.
01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.
ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.
2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.




3 Comments:

  1. The government should treat all the teachers equally and l hope our CM will definitely provide the benefits to the secondary teachers who were promoted between 1.1.2006 and 31.12.2010

    ReplyDelete
  2. நண்பா,பாதிக்கப்பட்டவரகள அல்ல, மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.ஏன் நாம் ஒன்றாக இணைந்து கோரிக்கை வைக்க கூடாதா? இப்படியே ஏமாளிகளாக இருக்கலாகமா? சீக்கிரம் சிந்தியுங்கள்....

    ReplyDelete
  3. நண்பா,பாதிக்கப்பட்டவரகள அல்ல, மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.ஏன் நாம் ஒன்றாக இணைந்து கோரிக்கை வைக்க கூடாதா? இப்படியே ஏமாளிகளாக இருக்கலாகமா? சீக்கிரம் சிந்தியுங்கள்....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive