சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நேர்முக உதவியாளர், தட்டச்சர்,
ஆய்வா ளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக
நிரப்புவதற்காக ஆகஸ்ட் 28-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்
என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர், பதிவாளரின்
நேர்முக உதவியாளர் (காலியிடங்கள்83), நேர்முக எழுத்தர், கம்ப்யூட்டர்
ஆபரேட்டர் (61), தட்டச்சர் (84), ரீடர், எக் ஸாமினர் (80), கேஷியர்,
ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பணியிடங் கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம்
நேரடியாக நிரப்பப்பட உள்ளன. பட்டதாரிகள் இப்பணிக ளுக்கு விண்ணப்பிக்கலாம்.
உயர் நீதிமன்றப் பணியில் இருப் பவர்கள் மற்றும் தமிழ்நாடு நீதித் துறை
அமைச்சுப் பணியாளர்க ளுக்கு வயது வரம்பு 45ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கானஎழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதியில் நடைபெறும். இதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கானஎழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதியில் நடைபெறும். இதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...